இன்று காலை என் அறைக்கு வந்த நண்பன் ஒருவன் “இன்னைக்கு ஹிந்து பேப்பரைப் பார்த்தியா?” என்று ஆர்வமாய்க் கேட்டான் என் அறைவாசியிடம் (roommate ;-)). “இல்லை” என்றதும் வேக வேகமாய் அந்த நாளிதழை எடுத்து எதையோ தேடினான். “இதோ இங்க இருக்கு!” என்று உற்சாகமாய் ஒரு பக்கத்தைக் காட்டினான். செய்தித்தாளுடன் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கருப்புப் பெட்டியிலிருந்து ஏதோ புரியாத ஒலி கேட்டது. உற்று கவனித்தால், அது வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார் விளம்பரம். ஆம், செய்தித்தாளிலே பேசும் விளம்பரம்!!

விளம்பரத்தின் புகைப்படம்
“அடப்பாவிகளா! இதுக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்?!!” என்று எண்ணியபோது “பொருளின் உற்பத்திச் செலவை விட அதற்கான விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்கின்றன கிட்டத்தட்ட எல்லா முன்னனி நிறுவனங்களும்!” என்ற கட்டுரையைப் பல நாட்களுக்கு முன் ஒரு வார இதழில் படித்தது நினைவுக்கு வந்தது. நண்பர்கள் அதை “செமயா இருக்கு” என்று ரசித்த போதும் என்னால் முடியவில்லை.
இந்த விளம்பரத்தால் யாருக்கு என்ன பலன்? இதைப்பார்த்து யாராவது இந்தக் காரை வாங்கிவிடப்போகிறார்களா??
நாளிதழில் அந்தப் பக்கத்தைக் திறந்தாலே பதிவு செய்யப்ட்ட வசனத்தைப் பேச ஆரம்பித்துவிடுகிறது அந்த வாயில்லா ஜீவன். முதல் முறை கேட்க ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் பேப்பரைத் திறக்கும்போதெல்லாம் ஒலி எழுப்புவது எரிச்சலா இல்ல? இது ஓர் அத்துமீறல் அல்லவா? அதுமட்டுமல்ல, இன்று இத்தனை வீடுகளைச் சென்றடைந்த இந்த மின்னனு சாதனம் நாளை எங்கே போகப் போகின்றது? நிச்சயம் குப்பைக்குத்தான்! ஏற்கனவே சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சமயத்தில் இப்படியொரு மின்கழிவினைப் பெருமளவில் உற்பத்தி செய்து நம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறது ஒரு தனியார் நிறுவனம், அதற்கு உடந்தை பல முன்னனி நாளிதழ்கள்!!
என்ன கொடுமை சார் இது??!! 🙁
🙁
your thought is nice………………but in all invention there will be both good and bad…………….just have to accept it .
இது கண்டுபிடிப்பு அல்லவே! புதிய மாறுபட்ட விளம்பர யுக்திதான் என்றாலும் இதனால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என்பதே என் கருத்து. இத்தகைய யுக்திகளை பயனுள்ள நல்லனவற்றிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் இது விளம்பர உலகில் மிகவும் புதுமையான முயற்சிதான் என்பதை மறுக்க முடியாது. பாராட்டுக்கள்! 🙂
S of course!! This s a new way of advertising.. I agree with u..[:)]